சினிமா செய்திகள்

நிர்வாணமாக இருக்க 1 வேன்.. 6 கேரவன்கள் தந்தால் தான் ஷூட்டிங் - பாலிவுட் நடிகர்கள் அலம்பல் - இயக்குநர் புலம்பல்
- அமிதாப் பச்சன் தனது ஊழியர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுப்பதையே மறுத்துவிடுவார்.
- ஒவ்வொரு வேனிலும் குறைந்தது 6 உதவியாளர்கள் வேலை செய்வார்கள்.
சினிமா என்பது சாமானியர்களுக்கு புலப்படாத ஒரு நிழல் உலகம் ஆகும். அதிலும் பாலிவுட் சினிமா எலைட் தன்மை தொக்கி நிற்கும் ஒரு மாயக் களம்.
திரைபிரபலங்கள், நடிகர்கள், நடிகைகளின் லக்ஸுரி வாழக்கை குறித்து அரசல் புரசல்கள் அவ்வப்போது துண்டு செய்திகள் மூலம் தெரியவருவது வழக்கம்.
அதுவும் ஆங்காங்கு பொதுவெளியில் மனம் திறக்கும் Insider-களின் மூலம் வெகுமக்களை மலைக்கவைக்கும் சில தகவல்கள் கசியும்.
அந்த வகையில் சில பாலிவுட் ஜெயண்ட் நடிகர்களின் அலம்பல்கள் குறித்து ஷூட்அவுட், மும்பை சாகா, ஜிந்தா உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சஞ்சய் குப்தா சில விஷயங்களை போட்டுடைத்துள்ளார்.
அண்மையில் பங்கேற்ற பாட்கேஸ்ட் ஒன்றில் நடிகர்கள் செலவு குறித்து தயாரிப்பார்கள் புலம்பல் பற்றி பேசிய குப்தா, அமிதாப் பச்சன், ஹிரித்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் ஒரே ஒரு மேக்அப் பாய் உடன் எளிமையாக இருப்பார்கள். அமிதாப் பச்சன் எல்லாம் தனது ஊழியர்களுக்கு தயாரிப்பாளர் சம்பளம் கொடுப்பதையே மறுத்துவிடுவார். அவரே பார்த்துக்கொள்வார்.
ஆனால் எனக்கு தெரிந்த சில நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கென கட்டாயம் 6 வேனிட்டி கேரவன்கள் வேண்டும் என கொருவர். ஆமாங்க சீரியஸா உண்மைதான். 6 வேன்கள்!
ஒரு வேன் அவர்கள் தனியாக இருப்பதற்கு, அதாவது அவர்கள் அதில் நிர்வாணமாக கூட அமர்ந்துகொண்டு Chill செய்வார்கள். மற்றொரு வேன் மேக்அப் போடுவதற்கு, அடுத்தது உடற்பயிற்சி செய்யும் உபகரணங்கள் அடங்கிய ஜிம் வேன், மற்றொன்று வருபவர்களை சந்திக்கும் மீட்டிங் பர்பஸ்க்கு, அடுத்தது அமர்ந்து சாப்பிட தனியாக ஒரு வேன், கடைசியாக ஒரு வேன், அது இந்த மற்ற 5 வேன்களில் பணி செய்யும் தங்கள் உதவியார்கள் இருப்பதற்கு, ஒவ்வொரு வேனிலும் குறைந்தது 6 உதவியாளர்கள் வேலை செய்வார்கள்.
ஜிம் வேன் என்றால் அதில் டிரெய்னர்கள் இருப்பார்கள், மேக்கப் வேன் என்றால் மேக்அப் ஆர்டிஸ்ட்கள், அந்த ஆர்டிஸ்ட்களின் அசிஸ்டண்டுகள் என இருப்பார்கள். இந்த செலவு மொத்தமும் தயாரிப்பாளர் தலையில் தான் என்று தெரிவித்தார்.