சினிமா செய்திகள்

சரியாக பதிலளிக்காததற்கு நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே சூர்யா
- கடந்த ஆண்டு சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி நடித்து இருந்தார்.
- இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு சூர்யாஸ் சாட்டர்டே படத்தில் நானி நடித்து இருந்தார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.
சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்தார் இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்து மிரட்டி இருப்பார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் சூர்யா சாட்டர்டே திரைப்படத்திற்காக எஸ்ஜே சூர்யாவிற்கு சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார். Gaddar தெலுங்கானா திரைப்பட விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு எஸ்.ஜே சூர்யா நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் அவர் படக்குழு, தெலுங்கானா அரசுக்கு, விவேக் இயக்குநருக்கு, நானி மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்தார்.
எஸ்ஜே சூர்யா விருது வென்றதுக்கு நானி அவரது எக்ஸ் தளத்தில் " வாழ்த்துக்கள் சார், நீங்கள் வெறும் துணை நடிகர் அல்ல நீங்கள்தான் அனைத்தும்" என தெரிவித்தார். அதற்கும் எஸ்.ஜே சூர்யா நன்றி நேச்சுரல் ஸ்டார் என ஒரு வரியில் பதிலளித்தார்.
மேலும் நேற்று அதை குறிப்பிட்டு " நானி சார், சாரி, ஷூட்டில் இருந்ததால் சரியாக மெசெஜ் செய்ய முடியவில்லை, வெறும் நன்றி என்ற வார்த்தை சொன்னால் ஈடாகாது, நீங்கள் மற்றும் விவேக் இல்லை என்றால் இதற்கு வாய்ப்பே இல்லை" என தெரிவித்துள்ளார்.