சினிமா செய்திகள்

`என்ன வாழ்த்த வேண்டாம்-னு சில பேர் இருக்காங்க, அவங்களுக்கு நான் சொல்றது ஒன்னே ஒன்னுதான்' - ரவி மோகன்
- ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
- ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர்.
நடிகர் ரவி மோகன் தற்போது பராசக்தி மற்றும் கராத்தே பாபு திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
விழாவிற்கு பல திரைப்பிரபலங்கள் தமிழ் மட்டுமல்லாது பிற மொழி நட்சத்திர நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர். அந்த வகையில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார் இந்த விழாவில் கலந்துக் கொண்டார். இவர்களுடன் கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீனாத், மோகன் ராஜா, அதர்வா மற்றும் பலர் கலந்து கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர்.
ரவிமோகன் ஸ்டூடியோஸ் தயாரிப்பு நிறுவனம் முதலில் தயாரிக்கப்போகும் இரண்டு படங்களின் பூஜையை இந்த விழாவில் தொடங்கினர்.
இந்த விழாவில் ரவி மோகன் கூறியதாவது "என்னுடைய குடும்பம், ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் இங்கு வந்துள்ளீர்கள் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. மேலும் சமீபத்தில் என் மீது பல எதிர்மறை விமர்சனங்கள் எழும்பியது. என் சொத்துக்கள் முடக்கப்பட்டது. ஆனால் உண்மையில் அந்த பணம் , சொத்து எல்லாம் எனக்கு ஒரு பொருட்டாக இல்லை. என் உண்மையான சொத்து என்றும் நீங்கள் தான், குடும்பம், நண்பர்கள் மட்டுமே. இந்த சொத்தை யார் சம்பாதிக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள். என்ன வாழ்த்த வேண்டாம்-ன்னு சில பேர் இருக்காங்க. அவங்களுக்கு நான் சொல்றது ஒன்னே ஒன்னுதான், இங்கதான் இருப்பேன் வளர்ந்துட்டே இருப்பேன். நன்றி" என கூறினார்.