என் மலர்

    சினிமா செய்திகள்

    என் மீது தவறு இருந்தால் சொல்லுங்கள்... மனம் திறந்த விஜய் சேதுபதி
    X

    என் மீது தவறு இருந்தால் சொல்லுங்கள்... மனம் திறந்த விஜய் சேதுபதி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரசிகர்களை மகிழ்விக்கவே விரும்புகிறேன்.
    • ரசிகர்களின் மனநிலை தான் எனக்கு முக்கியம்

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்த 'தலைவன் தலைவி' படம் 'ஹிட்' அடித்தது. தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெய்ன்' படத்திலும், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் ஒரு தெலுங்கு படத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

    இதற்கிடையில் தன் மீதும், தனது மகன் சூர்யா மீதும் எழும் விமர்சனங்கள் குறித்து விஜய் சேதுபதி மனம் திறந்தார்.

    அவர் கூறும்போது, ''எல்லா இடத்திலும் எதிர்மறையான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதை தடுக்க முடியாது. எப்படி கையாளுவது? என்பதை கற்றுக்கொள்வதே முக்கியம். நான் எந்த தவறு செய்தாலும், 'இப்படி செய்துவிட்டேனே...' என்று யோசிப்பதை விட, அடுத்து என்ன செய்யலாம்? என்பதையே யோசிக்கிறேன்.

    ரசிகர்களை மகிழ்விக்கவே விரும்புகிறேன். அதற்கு செய்யவேண்டியதை செய்கிறேன். என் மீது தவறுகள் இருந்தால் சொல்லுங்கள், அடுத்த படத்தில் அவற்றைத் திருத்தி கொள்வேன். ரசிகர்களின் மனநிலை தான் எனக்கு முக்கியம்'' என்றார்.

    Next Story
    ×