சினிமா செய்திகள்

உலகளவில் 300 கோடி வசூலித்த War 2 !
- ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது.
- மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வார் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இப்படத்தில் கியாரா அத்வானி மிகவும் கவர்ச்சியான கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை அயன் முகர்ஜி இயக்க யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
திரைப்படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் திரைபடம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதியாவில் மட்டும் 240 கோடி ரூபாய் வசூலித்தது. ஓவர்சீஸ்-ல் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story