சினிமா செய்திகள்

ஏ.ஆர் முருகதாஸ் சாருடன் பணியாற்றியது மிகப்பெரிய சந்தோஷம் - தெலுங்கில் பேசி அசத்திய SK
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று மாலை முதல் தொடங்க இருக்கிறது.
மதராஸி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு மொழியில் ரசிகர்களிடம் பேசி அசத்தினார் அவர் கூறியதாவது " எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மகேஷ் பாபு , சிரஞ்சீவி போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் அவருடைய படத்தில் நான் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அவருக்கும் மிகபெரிய நன்றி" என கூறினார்.