பொது மருத்துவம்

ஹார்மோனும், மன அழுத்தமும்...!
- ஹார்மோன் பெருமளவு நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
- கார்டிசோல் சுரப்பி அதிகரிக்கும்போது ஒரு நபரின் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் கொழுப்பு அதிகரித்து காணப்படும்.
மனித உடலின் இயக்கத்திற்கு ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் இருக்கும் பல்வேறு சுரப்பிகள் வெவ்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன.
இதில் அட்ரீனல் சுரப்பியால் உற்பத்தி செய்யப்படும் கார்டிசோல் என்ற ஹார்மோன் மன அழுத்தத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது.
பாம்பு, கரடி போன்றவை விரட்டும்போது மனிதர்கள் ஓடி, ஆபத்து காலத்தில் உயிர் தப்பிக்க இந்த கார்டிசோல் ஹார்மோன் தூண்டுகிறது. ஒருவருக்கு மன அழுத்தம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் கார்டிசோல் ஹார்மோன் அதிகப்படியாக சுரக்கிறது. அது போன்ற நிலையில் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து சர்க்கரை அளவு உயர்ந்து விடும். இதனால் ரத்த அழுத்த பாதிப்பும், டைப்-2 வகை சர்க்கரை நோயும் உருவாகிவிடும். இந்த ஹார்மோன் பெருமளவு நீரிழிவு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கார்டிசோல் சுரப்பி அதிகரிக்கும்போது ஒரு நபரின் முகம், கழுத்து, வயிறு பகுதிகளில் கொழுப்பு அதிகரித்து காணப்படும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிலருக்கு கழுத்து பகுதியில் `எருமை திமில்' போன்ற கொழுப்பு திரட்சி நிலை காணப்படும். பொதுவாக, மன அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலைகளை தவிர்ப்பது, இன்ப துன்பங்களை சமமாக கருதும் மனநிலை, தியானம் போன்றவற்றால் இந்த கார்டிசோல் ஹார்மோனின் அதிகப்படியான சுரப்பை கட்டுப்படுத்தலாம்.