என் மலர்

    சமையல்

    உணவு மீந்துவிட்டால் கவலை வேண்டாம்...
    X

    உணவு மீந்துவிட்டால் கவலை வேண்டாம்...

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.
    • பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம்.

    உணவுப்பொருட்கள் மீந்துவிட்டால் வீட்டில் பெண்கள் கவலைப்படுவார்கள். ஆனால் சில உணவுப்பொருட்கள் மீதமாகிவிட்டால் கவலைப்படத் தேவையில்லை. அவற்றை வேறு மாதிரி தயாரித்து பயன்படுத்தலாம்.

    அதற்கான குறிப்புகள்...

    * மீதமான தேங்காய் சட்னியை கெட்டியான புளிப்பு மோரில் சேர்த்து ஒரு கொதி விட்டால், சுவையான மோர்க்குழம்பு தயார்.

    * ஊறுகாய் பாட்டிலில் காய் எல்லாம் தீர்ந்த பிறகு மிளகாய் வண்டல் மீந்திருந்தால், பாகற்காய், வெண்டைக்காய் போன்றவற்றுக்குள் அடைத்து 'ஸ்டப்டு' வெஜிடபிள் கறி செய்யலாம்.

    * மீதமான குழம்பு, சாம்பாரை பயன்படுத்தி சுவையான டிபன் சுலபமாக செய்யலாம். அவற்றில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அதனுடன் வறுத்த ரவையைக் கொட்டிக் கிளறவும். வித்தியாசமான சுவையில் உடனடி கிச்சடி ரெடி.

    * பிரட் மீந்து விட்டதா? அதை மிக்சியில் போட்டு பொடியாக்கி, உப்பு, கரம் மசாலா, கொத்தமல்லித் தழை, வெங்காயம் சேர்த்துப் பிசைந்து 'கட்லெட்டாக பொரித்து எடுக்கலாம். சுவையாக இருக்கும்.

    * மீந்துவிட்ட தேங்காய் சட்னியை ரவா தோசை மாவில் கலந்து தோசை வார்த்தால் சுவையாக இருக்கும்.

    * கொத்தமல்லிச் சட்னி மீந்துவிட்டால், மோரில் சட்னியைப் போட்டுக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் போல் சுவையாக இருக்கும்.

    * இடியாப்பம் மீந்துவிட்டதா? அதை ஒருநாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு. நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டால் தேவைப் படும்போது சுவையான வற்றலாக பயன்படுத்தலாம்.

    * சமையலுக்கு வாங்கிய முட்டைக்கோஸ் மிச்சமாகிவிட்டதா? கோஸை பொடிப்பொடியாக நறுக்கி, அத்துடன் நிறைய வெங்காயத்தையும் நறுக்கிப்போட்டு, இஞ்சி, பச்சை மிளகாய் நறுக்கி இக்கலவையுடன் கடலைமாவு, அரிசிமாவு, உப்புத் தூள், மிளகாய்ப்பொடி கலந்துகொண்டு லேசாக தண்ணீர் தெளித்துப் பிசைந்து சுவையான பக்கோடா தயார் செய்யலாம்.

    * தேன்குழலுக்கு அரைத்த மாவு மீந்து விட்டால், அதைக் கரைத்து உப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தோசை வார்த்தால், மிருதுவாக தோசை ருசியுடன் இருக்கும்.

    * சாதம் மீந்துவிட்டால், அதனுடன் பூண்டு, சோம்பு, காய்ந்த மிளகாய், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மிக்சியில் போட்டு அரைத்து வடாம் போல பிழிந்து வெயிலில் காய வைக்கவும். இதை எண்ணெயில் பொரித்துச் சாப்பிட்டால் மொறுமொறுவென்று இருப்பதுடன், சுவையிலும் அசத்தும்.

    * பருப்புவடை மீந்து விட்டால், மறுநாள் வடைகறி செய்யலாம். அல்லது மிக்சியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, வெந்த காய்களுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கிளறி இறக்க, உசிலி சுவையாக இருக்கும்.

    Next Story
    ×