சமையல்

இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
- பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்கும்.
- முழுத் தேங்காயை பிரிட்ஜில் வைத்து தேவையானபோது உடைத்துக் கொள்ளலாம்.
* பெண்கள் நிறைய நேரங்களை சமையல் அறையில் செலவிடுவதால் அந்த அறை நல்ல காற்றோட்டமாகவும், வெளிச்சமாகவும் இருத்தல் அவசியம்.
* சமையலறை எந்த அளவில் இருந்தாலும் சரி, நுழைவாயிலில் கட்டாயம் ஒரு மிதியடி போட வேண்டும். மேலும் அதில் தலைமுடி, நூல் போன்ற குப்பைகளைச் சேர விடாமல் அடிக்கடி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
* சமையல் அறையில் உள்ள மேடையில் எண்ணெய் கொட்டி இருந்தால் கடலை மாவைக் கெட்டியாகத் தண்ணீரில் கரைத்துப் பூசி சிறிது நேரம் ஊறவைத்து தேய்த்துக் கழுவ, மேடை பளிச்சென்று இருக்கும்.
* அரிவாள் மனை, தேங்காய் துருவி, காய்கறி நறுக்கப் பயன்படும் கத்தி போன்றவற்றில் உள்ள துருவைப் போக்க அவற்றின் மீது ஒரு வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் துரு இருந்த இடம் தெரியாமல் நீங்கிவிடும்.
* எண்ணெய்ப் பிசுக்கான பாத்திரங்களைக் கழுவுவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு மற்றும் கடுகுத்தூளைப் போட்டு கழுவினால் பாத்திரங்கள் சுத்தமாக எந்தவித வாடையும் இல்லாமல் இருக்கும்.
* கிழங்குகளை மூடி வைக்கக் கூடாது. காற்றோட்டமாக பரப்பி வைக்க வேண்டும். தேங்காய் மூடியில் கொஞ்சம் உப்பைத் தூவி வைத்தால் தேங்காய் மஞ்சள் நிறமாக மாறாமல் இருக்கும்.
* வாழைத் தண்டு, சுரைக்காய், நூல்கோல் முதலிய காய்கறிகள் மீது நகம் வைத்தால் உள்ளே போவது போல் இருக்க வேண்டும். அது தான் பிஞ்சு.
*பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்கும்.
*பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் பாக்கெட்டில் போட்டு பிரிட்ஜில் வைக்கவும்.
*முழுத் தேங்காயை பிரிட்ஜில் வைத்து தேவையானபோது உடைத்துக் கொள்ளலாம். தேங்காய் கெடாமல் இருக்கும்.