என் மலர்

    சமையல்

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.
    • தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * வெந்தயக் குழம்பு தயார் செய்யும்போது ஒரு டீ ஸ்பூன் எள்ளுப் பொடியை தூவினால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * மீந்து போன வாழை சிப்ஸ், உருளை சிப்ஸை வீணாக்காமல் மிக்சியால் கரகரப்பாக பொடித்து பொரியலுக்குத் தூவலாம். மாறுபட்ட சுவையும், மணமும் கிடைக்கும்.

    * பாயசம் நீர்த்து போயிருந்தால் அதில் வாழைப் பழத்தைப் பிசைந்துப் போட்டு கொஞ்சம் தேனும் கலந்தால் போதும். சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.

    * வித்தியாசமான முறையில் ரவா கேசரி செய்ய வேண்டுமானால், ரவையை நெய் விட்டு சிவக்க வறுத்து, காய்ச்சிய பாலில் ஊற வைத்து பிறகு சர்க்கரைப்பாகு செய்து கேசரி கிளறினால் மாறுபட்ட சுவையில் ருசிக்கலாம்.

    * பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.

    * தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * பாகற்காய் வறுவல் செய்யும் போது முதலில் பாகற்காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால் மொறுமொறுப்பு குறையாமலிருக்கும்.

    * சூடான எண்ணெய்யில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு எதை பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.

    Next Story
    ×