என் மலர்

    சமையல்

    பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
    X

    பயனுள்ள சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும்.
    • வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும்.

    * கிழங்குகளை உப்புப்போட்டு வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் சீக்கிரம் வேகாது.

    * சாதம் கொதிக்கும் போது இரண்டு துளி எலுமிச்சம்பழச் சாறு பிழிந்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.

    * உருளைக்கிழங்கை சீவியதும் சிறிது பயத்தம் பருப்பு மாவைத் தூவி சிப்ஸ் செய்தால் மொறுமொறுப்பாக இருக்கும்.

    * பால் பாயசம் செய்யும் போது பாதாம் பருப்பை அரைத்து சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

    * ரவாதோசை செய்யும்போது 2 ஸ்பூன் கடலை மாவு சேர்த்தால் தோசை நன்கு சிவந்தும், மொறுமொறுப்பாகவும் இருக்கும்.

    * சேமியாவை வாணலியில் வறுத்து விட்டு உப்புமா செய்தால் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

    * கோதுமை அல்வா செய்யும்போது வெந்நீர் தெளித்து நெய் கலந்து கிளறினால் சுவையும் மணமும் கூடும்.

    * பச்சை மிளகாயைக் காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பெருங்காயம் கட்டியாகாமல் மிருதுவாக இருக்கும்.

    * வத்தல் குழம்பு தயார் செய்யும் போது அவரை, கத்திரி, கொத்தவரங்காய் வத்தல்களை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்து விடும்.

    * எலுமிச்சை, தக்காளி, புளி, தேங்காய் சாத வகைகள் செய்யும் முன்பு சாதத்தை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் உதிரி உதிரியாகவும், சுவையாகவும் இருக்கும்.

    * வடை மாவில் அரை கப் சாதத்தை பிசைந்து வடை தயாரித்தால் மிருதுவாக இருக்கும். எண்ணெய்யும் அதிகம் குடிக்காது.

    Next Story
    ×