சமையல்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பால் கொழுக்கட்டை
- மாவு சூடாக இருக்கும்போதே சிறிய சிறிய உருண்டைகளாக செய்துகொள்ளுங்கள்.
- ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் பாலை கொதிக்க வைக்கவும்.
விநாயகர் சதுர்த்திக்கு பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 கப்
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 1 கப்
பால் - 2 கப்
தேங்காய்ப் பால் - 1 கப்
சர்க்கரை - சுவைக்கேற்ப
ஏலக்காய்த் தூள் - சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை கொட்டுங்கள். அதில் சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.1 கப் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரிசி மாவை சேர்த்து கெட்டியான மாவாக பிசைந்துகொள்ளவும்.
மாவு சூடாக இருக்கும்போதே சிறிய சிறிய உருண்டைகளாக செய்துகொள்ளுங்கள். அவற்றை இட்லித் தட்டில் வைத்து வேக வைக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் 2 கப் பாலை கொதிக்க வைக்கவும். தேவையான அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.
பால் நன்றாக கொதித்து வந்ததும் கொழுக்கட்டை உருண்டைகளை அதில் போடவும்.
பிறகு ஒரு டம்ளரில் ஒரு ஸ்பூன் மாவை தண்ணீரில் கரைத்து அதிலே ஊற்றவும். இப்போது கெட்டி பதத்துக்கு வரத் தொடங்கிவிடும்.
சுவைக்காக தேங்காய்ப் பால் சேர்க்கலாம். கொழுக்கட்டைகள் வெந்ததும் ஏலக்காய்த்தூளை சேர்த்து கலக்கவும். பால் கொழுக்கட்டை தயார்.
பால் கொழுக்கட்டையை சூடாகவே பரிமாறலாம் அல்லது குளிரவைத்து பரிமாறலாம்.