என் மலர்

    பெண்கள் உலகம்

    டிஷ்வாஷர் பயன்படுத்த தயங்குபவரா நீங்கள்?... இதை தெரிந்து கொள்ளுங்கள்
    X

    'டிஷ்வாஷர்' பயன்படுத்த தயங்குபவரா நீங்கள்?... இதை தெரிந்து கொள்ளுங்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாஷிங்மெஷினை போல, தண்ணீரை சூடாக்கி, பாய்ச்சி அடித்து பாத்திரங்களை ஊறவைக்கும்.
    • நம் ஊரில் பயன்படுத்தப்படும் பாத்திர வகைகளை கவனத்தில் கொண்டும், டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன.

    நம் வீடுகளில் பிரிட்ஜ், வாஷிங்மெஷின், ஏ.சி., மைக்ரோவேவ் ஓவன்... போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்கள் இருக்கும். ஆனால், பாத்திரம் கழுவப்பயன்படும் டிஷ்வாஷர் வாங்கலாமா..? வேண்டாமா...? என்பது மட்டும் பெரிய கேள்விக்குறியாகவே இருக்கும். ஏனெனில், டிஷ்வாஷர் சுத்தமாக பாத்திரங்களை கழுவி கொடுக்குமா..? என்ற சந்தேகத்தில், டிஷ்வாஷரை மட்டும் வெயிட்டிங் லிஸ்டில் வைத்திருப்பார்கள். உண்மையில், இப்போது சந்தையில் இருக்கும் டிஷ்வாஷர்கள் நன்றாகவே சுத்தப்படுத்தி கொடுக்கின்றன.

    * இந்திய உணவுகள்

    ஆரம்பத்தில் மேலை நாடுகளின் உணவு வகைகள், உணவு பாத்திரங்கள், சமையல் முறைகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஷ்வாஷர்கள்தான், சந்தையில் விற்பனையாகின. ஆனால் இப்போது இந்திய மக்களுக்காகவே பிரத்யேகமாக டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, நம்ம ஊரு சமையல் முறைகளுக்கு ஏற்பவும், நம் ஊரில் பயன்படுத்தப்படும் பாத்திர வகைகளை கவனத்தில் கொண்டும், டிஷ்வாஷர்கள் தயாரிக்கப்படுகின்றன. கூடுதலாக, சுத்தப்படுத்தும் புரோகிராம்களும் இந்தியர்களுக்கு ஏற்ப பிரத்யேகமாக வடிவமைக்கப்படுவதால், எண்ணெய் பிசு பிசுப்பு, பாத்திரத்துடன் ஒட்டியிருக்கும் விடாப்பிடியான உணவுகள் வரை எல்லாவற்றையும் சுத்தமாக நீக்கிவிடுகிறது.



    * எப்படி சுத்தமாக்கும்?

    வாஷிங்மெஷினை போல, தண்ணீரை சூடாக்கி, பாய்ச்சி அடித்து பாத்திரங்களை ஊறவைக்கும். கூடுதலாக, வாஷிங்மெஷினில் பயன்படும் டிடர்ஜெண்ட் பொடி அல்லது திரவங்களை போல பாத்திரங்களை சுத்தமாக்கும் திரவங்கள், மாத்திரை போன்றவற்றை நிரப்பினால், அவை பாத்திரங்களை சுத்தமாக கழுவி கொடுக்கும். தண்ணீரை பீய்ச்சி கழுவிக்கொடுப்பதுடன், பாத்திரங்களை 90 சதவிகிதம் தண்ணீர் இல்லாமல் உலர்த்தி கொடுக்கும் வேலையையும், டிஷ்வாஷர்கள் செய்கின்றன.

    * டிஷ்வாஷர் அளவு

    6 கிலோ, 7 கிலோ, 8 கிலோ... என வாஷிங்மெஷின்களின் துவைக்கும் அளவை குறிப்பதுபோல, டிஷ்வாஷர்களை 'பிளேஸ் செட்டிங்' கணக்கில் குறிப்பிடுகிறார்கள். அதாவது 8 பிளேஸ் செட்டிங், 13 பிளேஸ் செட்டிங்... என பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க, பிளேஸ் செட்டிங் கணக்கும் அதிகமாகும். அதனால், உங்களின் குடும்ப தேவைக்கு ஏற்ற பிளேஸ் செட்டிங் டிஷ்வாஷர்களை வாங்குவது நல்லது. முடிந்தவரை, இந்தியர்களுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஷ்வாஷர்களை தேர்ந்தெடுங்கள். ரூ.15 ஆயிரம் தொடங்கி, டிஷ்வாஷர்களை வாங்கலாம்.

    Next Story
    ×