என் மலர்

    மேற்கு வங்காளம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் ரோஸ்டன் சேஸ் 40 ரன்னிலும், ஷாய் ஹோப் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர் 27 ரன்னில் அவுட்டானார்.

    5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோமேன் பாவல் (34 ரன்), ஜேசன் ஹோல்டர் (37 ரன்) சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 76 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், அரையிறுதியில் நுழைந்துள்ள இந்திய அணி, வரும் 5-ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.

    வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
    • இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடை 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் கூறியதாவது:

    கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான்.

    உண்மையிலேயே இந்த இன்னிங்ஸ் மூலம் அணியை வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த நாட்களில் ஒன்று.

    என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பல உச்சங்களையும், சரிவுகளையும் சந்தித்து இருக்கின்றேன். இதன் மூலம் என் திறமை மீது எனக்கே பலமுறை சந்தேகம் வந்திருக்கிறது. என்னால் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியுமா என்றெல்லாம் தோன்றுகிறது. ஆனால் இன்று கடவுள் எனக்கு ஆசீர்வாதம் தந்திருக்கின்றார்.

    அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றேன்.

    கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளிலும், 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கும் விளையாடுகின்றேன். ஆனால் நான் வெறும் 60 போட்டிகளில் தான் விளையாடி இருப்பேன். ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து 100 போட்டிகளுக்கு மேல் பார்த்திருக்கின்றேன்.

    அதில் ரோகித் சர்மா, தோனி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் எப்படி விளையாடுவார்கள் என்பதைப் பார்த்து கற்றுக் கொண்டிருக்கின்றேன்.

    கூடுதலாக, என்னுடைய அனுபவத்தையும் சேர்த்து சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு இன்று நான் ரன்கள் சேர்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய இன்னிங்ஸ் ஆடுவேன் என்று நான் நினைக்கவில்லை. ஒரு தருணத்தில் ஒரு பந்து என்ற கவனம் செலுத்தி, பந்துக்கு ஏற்ற வகையில் விளையாடினேன்.

    இந்தப் போட்டி கொஞ்சம் வித்தியாசமானது. நான் எப்போதெல்லாம் அதிரடி காட்ட முயற்சி செய்தனோ, அப்போதெல்லாம் விக்கெட்டுகள் விழுந்தது. எனவே இன்று கொஞ்சம் அமைதி காத்து பின் அதிரடி காட்ட வேண்டும் என நினைத்தேன். உண்மையில் என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த நாள் என தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது.

    முன்னதாக, கடந்த 2014 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சேசிங்கில் 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாவட்ட நீதிபதிகளை நியமிக்க மேற்கு வங்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    • சுவேந்து 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.

    இறுதி பட்டியலில் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, SIR நடைமுறைக்குப் பிறகு இறுதிப் பட்டியலில் 7.04 கோடியாகக் குறைந்துள்ளது.

    இந்த SIR நடவடிக்கையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடக்கம் முதலே எதிர்த்து வந்தார்.

    தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் தானே ஆஜராகி வாதாடினார்.

    தேர்தல் ஆணையம், மேற்கு வங்க அரசு இடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கை இன்மை ஒரு அரிய சூழல் என்று சுட்டிக்காட்டி SIR பட்டியல் சரிபார்ப்புக்கு மாவட்ட நீதிபதிகளை நியமிக்க மேற்கு வங்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

    எனவே நீதிபதிகள், 'மறுஆய்வு' பட்டியலில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த வாக்காளர்களின் விவரங்கள் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதிகளால் சரிபார்க்கப்படும்.

    இந்த சரிபார்ப்புக்கு பின்னர் கூடுதலாக 8 லட்சம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே நேற்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் 47,111 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    மறுபுறம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் சுமார் 11,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராமில் சுவேந்து 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

    எனவே இந்த பாரிய வித்தியாசம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதேபோல் இறுதி வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக கொல்கத்தா வடக்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், 4 லட்சத்திற்கும் அதிகமானோரின் வாக்குகளும், கொல்கத்தா தெற்கில், 2 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் வரையும் நீக்கப்பட்டுள்ளன. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.
    • ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது.

    இந்நிலையில், கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 52-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி 2-வதாக அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    நடப்பு சாம்பியனான இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழையுமா என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    லீக் ஆட்டங்களில் அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை வென்ற பிறகு சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோல்வி அடைந்தது. சென்னையில் நடந்த ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 72 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதே உத்வேகத்துடன் வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில் தோற்றால் தொடரில் இருந்து வெளியேறும். இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அனைவரும் பொறுப்புடன் ஆட வேண்டும்.

    இந்தப் போட்டி மழையால் கைவிடப்பட்டால் இந்திய அணி வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். ஏனெனில், வெஸ்ட் இண்டீசைவிட நிகர ரன் ரேட்டில் இந்தியா பின்தங்கியுள்ளது.

    இந்திய அணியில் அபிஷேக் சர்மா மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருக்கிறார். இஷான் கிஷன் (214 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (213), ஷிவம் துபே (158), ஹர்திக் பாண்ட்யா (155), திலக் வர்மா (151) ஆகியோரும் பேட்டிங்கில் சிறப்பான நிலையில் இருக்கிறார்கள்.

    ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்திய பந்துவீச்சு எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இதனால் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை.

    வேகப்பந்தில் அர்ஷ்தீப் சிங், பும்ராவும் சுழற்பந்தில் வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

    வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஹெட்மயர், கேப்டன் ஷாய் ஹோப், ரூதர்போர்டு, போவெல் ஆகியோர் பேட்டிங்கிலும், குடாகேஷ், ஜேசன் ஹோல்டர், ஷமர் ஜோசப் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்தியாவை போலவே வெஸ்ட்இண்டீஸ் அணியும் லீக் சுற்றில் தோல்வியை தழுவாமல் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.

    இன்று மாலை 3 மணிக்கு நடை பெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் உள்ளது. ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 'மறுஆய்வு' பட்டியலில் உள்ள 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை நீதிபதிகள் சரிபார்க்க உள்ளனர்.
    • 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.04 கோடியாக குறைந்துள்ளது.

    மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முடிவடைந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

    மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் அகர்வால் பட்டியலை வெளியிட்டார். இறுதி பட்டியலில் 63.66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    இறப்பு, இடமாற்றம், இரட்டைப் பதிவு போன்ற காரணங்களால் அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    மாநிலத்தில் 7.66 கோடியாக இருந்த மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, SIR நடைமுறைக்குப் பிறகு இறுதிப் பட்டியலில் 7.04 கோடியாகக் குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டபோது 58 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்ட நிலையில், இந்த முறை கூடுதலாக 5 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

    1.82 லட்சம் புதிய வாக்காளர்கள் இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    அதேபோல், 'மறுஆய்வு' பட்டியலில் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வாக்காளர்களின் விவரங்கள் உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவுப்படி, மாவட்ட நீதிபதிகளால் சரிபார்க்கப்படும்.

    இந்த சரிபார்ப்புக்கு பின்னர் கூடுதலாக 8 லட்சம் வாக்குகள் நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தெற்கு கொல்கத்தாவில் உள்ள முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் பவானிபூர் தொகுதியில் 47,111 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    கொல்கத்தா வடக்கு மற்றும் கொல்கத்தா தெற்கு மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து ஆறு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    அதிகபட்சமாக கொல்கத்தா வடக்கு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், 4 லட்சத்திற்கும் அதிகமானோரின் வாக்குகளும், கொல்கத்தா தெற்கில், 2 லட்சத்து 15 ஆயிரம் வாக்குகள் வரையும் நீக்கப்பட்டுள்ளன.

    மறுபுறம், கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் நந்திகிராம் தொகுதியில் சுமார் 11,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில், நந்திகிராமில் சுவேந்து 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்தியாவில் ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் உறவு சட்டப்பூர்வமானதாக மாறியது.
    • சக பெண் வழக்கறிஞர் அருந்ததி கட்ஜுவுடனான தனது உறவை வெளிப்படுத்தினார்.

    தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உள்ளிட்ட 10 மாநிலங்களில், காலியாகவுள்ள 37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது.

    அந்த வகையில், மேற்கு வங்கத்தில் இருந்து 5 மாநிலங்களைவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

    அதில் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 4 இடமும், பாஜகவுக்கு 1 இடமும் வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது.

    மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை மேற்கு வங்கத்தில் ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நேற்று அறிவித்தது.

    தங்களின் மாநிலங்களவை வேட்பாளர்களாக, அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் மாநில டிஜிபி ராஜீவ் குமார், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி மற்றும் பிரபல நடிகை கோயல் மாலிக் ஆகியோரைத் தேர்ந்தெடுத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    இந்த நால்வரில் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி நாடு முழுவதும் கவனம் பெற்றுள்ளார்.

    யார் இந்த மேனகா குருசாமி? 

    2018-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ( இயற்கைக்கு மாறான உறவு) என்பதில் இருந்து தன்பாலின சேர்க்கையை நீக்கி உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது.

    இந்த தீர்ப்பின் மூலமே, இந்தியாவில் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள்உறவு சட்டப்பூர்வமானதாக மாறியது.

    இந்த வழக்கில் மனு மானுதாரருக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர்களில் மேனகாவும் ஒருவர்.

    இந்த தீர்ப்பிற்கு பிறகு, தனது சக பெண் வழக்கறிஞர் அருந்ததி கட்ஜுவுடனான தனது உறவை அவர் பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.

    தன்பாலின திருமண அங்கீகாரம் தொடர்பான பல வழக்குகளிலும் அவர் வாதிட்டுள்ளார்.

    ஹார்வர்ட் சட்டப் பள்ளியில் தனது எல்.எல்.எம். முடித்த மேனகா குருசாமி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ரோட்ஸ் ஸ்காலர் ஆவார்.

    2019 ஆம் ஆண்டு டைம் பத்திரிகை அறிவித்த உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலில் இவரும் ஒருவர்.

    மாநிலங்களவை தேர்தலில் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், பாராளுமன்றத்திற்குள் நுழையும் முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர் என்ற பெருமையை மேனகா குருசாமி பெற உள்ளார்.     

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.
    • நாடு முழுவதிலும் 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் ஏப்ரலில் காலியாகின்றன.

    கொல்கத்தா:

    பாராளுமன்றத்தில் மக்களவை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மக்களவை எம்.பி. ஆகிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் மூலம் மேல்சபை எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

    மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும். தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்.பி. பதவி இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாகின்றன.

    இதற்கிடையே, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், ஒடிசா, அசாம், பீகார், சத்தீஸ்கர், அரியானா, இமாச்சல பிரதேசம், தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 37 இடங்களுக்கான மேல்சபை தேர்தல் மார்ச் மாதம் 16-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் பாபுல் சுப்ரியோ, முன்னாள் டிஜிபி ராஜிவ்குமார், மேனகா குருசாமி, கோயல் மாலிக் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகின்றனர் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரிகள் நிலநடுக்கத்தால் பீதியடைந்து சாலையில் தஞ்சம் அடைந்தனர்
    • சிக்கிம் மாநிலத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    வங்கதேசத்தில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது.

    இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் சுமார் 1:30 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டாக்காவிலிருந்து 188 கி.மீ தொலைவில், 9.8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் நில அதிர்வு காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

    நிலநடுக்கத்தின் போது வீடுகளில் இருந்த மின்விசிறிகள், சோபாக்கள் ஆடியதாகவும், மேஜையில் இருந்த பாட்டில்கள் கீழே விழுந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். 

    கொல்கத்தாவில் மாநில தலைமை செயலகம், சட்டமன்றம் மற்றும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நிலநடுக்கத்தால் பீதியடைந்தனர். அச்சத்தில் அவர்கள் தெருக்களுக்கு ஓடி வந்தனர்.

    மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.

    முன்னதாக மதியம் 12:02 மணியளவில் சிக்கிம் மாநிலத்தின் நாமச்சி பகுதியிலும் ரிக்டர் அளவில் 2.7 கொண்ட சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி, இந்த நிலநடுக்கங்களால் பெரிய அளவிலான உயிரிழப்புகளோ அல்லது கட்டிட சேதங்களோ ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகவில்லை.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியே காரணம்.
    • ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்

    கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில் கேரளாவிற்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் மேற்கு வங்கத்திற்கு அளிக்கப்படவில்லை என்று அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

    அவர் கூறியதாவது, "மாநிலத்தின் பெயர் 'West Bengal' என்று 'W' எழுத்தில் தொடங்குவதால், தேசிய அளவிலான கூட்டங்கள், தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் மேற்கு வங்க மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகள் எப்போதும் கடைசியாகவே அழைக்கப்படுகின்றனர்.

    நானும் கூட்டங்களில் கடைசியாகப் பேசும் வாய்ப்பையே பெறுகிறேன்.

    மேற்கு வங்க சட்டமன்றத்தில் மாநிலத்தின் பெயரை Bangla (வங்காளம்) என மாற்ற ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டது.

    இருப்பினும், மத்திய அரசு அதனை நிலுவையில் வைத்துவிட்டு, கேரளாவின் கோரிக்கையை மட்டும் விரைவாக நிறைவேற்றியிருப்பது வஞ்சகமானது.

    கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே வளர்ந்து வரும் ரகசியக் கூட்டணியின் காரணமாகவே, அம்மாநிலத்தின் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு உடனே சம்மதித்துள்ளது.

    பாஜக தேர்தலின் போது மட்டும் 'Bangla' என்ற வார்த்தையைப் பயன்படுத்திக்கொண்டு, மற்ற நேரங்களில் பெங்காலிகளை அவமதிக்கிறது.

    ஒருநாள் நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள், அப்போது நாங்கள் நிச்சயம் பெயரை மாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாகேன் ராய்க்கு பங்கா விபூஷண் விருது வழங்கி கவுரவைக்கப்பட்டது.
    • ராஜ்பன்ஷி சமூகத்தின் முக்கிய தலைவராக ராய் உள்ளார்.

    பாஜக மாநிலங்களவை எம்பியான நாகேன் ராய்க்கு மேற்கு வங்கத்தின் மிக உயர்ந்த குடிமகன் விருதான பங்கா விபூஷண் விருது வழங்கி கவுரவைக்கப்பட்டது.

    மேற்குவங்கத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி, நாகேன் ராய்க்கு விருது வழங்கியிருப்பது பேசுபொருளாகி உள்ளது.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் பலவீனமாக உள்ள வடக்கு வங்கதேசத்தில் உள்ள ராஜ்பன்ஷி சமூகத்தின் முக்கிய தலைவராக ராய் இருப்பதால் இந்த விருது முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமீபத்திய தேர்தல்களில் வடக்கு வங்கதேசத்தில் பாஜக நல்ல வாக்கு சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 7 தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

    அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    எஸ்.ஐ.ஆர். பணியின்போது பல்வேறு குளறுபடிகளில் ஈடுபட்ட அம்மாநிலத்தை சேர்ந்த 7 தேர்தல் அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், கடமை தவறுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    ×