என் மலர்

    வணிகம் & தங்கம் விலை

    GOLD PRICE TODAY : ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- சவரன் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது
    X

    GOLD PRICE TODAY : ஜெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை- சவரன் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
    • வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 6-ந்தேதி வரை விலை உயர்ந்து வந்து, பின்னர் குறையத் தொடங்கியது. கடந்த 10-ந்தேதி வரை விலை சரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியுள்ளது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 20-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 195 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295-க்கும் சவரனுக்கு 1,560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையாகிறது. 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

    11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

    10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560

    09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640

    08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    12-06-2025- ஒரு கிராம் ரூ.119

    11-06-2025- ஒரு கிராம் ரூ.119

    10-06-2025- ஒரு கிராம் ரூ.119

    09-06-2025- ஒரு கிராம் ரூ.118

    08-06-2025- ஒரு கிராம் ரூ.117

    Next Story
    ×