வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : அதிரடியாக குறைந்த தங்கம் விலை... எவ்வளவு தெரியுமா?
- நேற்று கிராமுக்கு ரூ.95-ம், சவரனுக்கு ரூ.760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் 2-வது வாரம் வரை 'கிடுகிடு'வென உயர்ந்து வந்தது. அதன்படி, கடந்த மாதம் 14-ந்தேதி ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 560 என்ற உச்சத்தை தொட்டு இருந்தது.
அதன்பிறகு விலை குறையத் தொடங்கியது. அம்மாத இறுதியில் ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்துக்கு கீழ் வந்து இருந்தது. இதனையடுத்து இம்மாத தொடக்கத்தில் இருந்து மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
அந்த வரிசையில் கடந்த 17-ந்தேதியில் இருந்து அதாவது ஒரு வாரமாக அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. நேற்றும் விலை எகிறியுள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 285-க்கும், ஒரு சவர ரூ.74 ஆயிரத்து 280-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.95-ம், சவரனுக்கு ரூ.760-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 380-க்கும், ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்து 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.75 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்து, இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சம் என்ற இலக்கையும் எட்டி பிடித்தது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,255-க்கும் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,040-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 128 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040
22-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,280
21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440
20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
19-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-07-2025- ஒரு கிராம் ரூ.129
22-07-2025- ஒரு கிராம் ரூ.128
21-07-2025- ஒரு கிராம் ரூ.126
20-07-2025- ஒரு கிராம் ரூ.126
19-07-2025- ஒரு கிராம் ரூ.126