வணிகம் & தங்கம் விலை

GOLD PRICE TODAY : தொடர்ந்து குறையும் தங்கம் விலை... இன்றைய நிலவரம்
- கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.75 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சம் என்ற இலக்கையும் எட்டி பிடித்தது.
இதனை தொடர்ந்து நேற்றுமுன்தினம் தங்கம் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில், கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,255-க்கும் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,040-க்கும் இரண்டாவது நாளாக நேற்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,210-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,160-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,280-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
25-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,680
24-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,040
23-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040
22-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,280
21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
25-07-2025- ஒரு கிராம் ரூ.128
24-07-2025- ஒரு கிராம் ரூ.128
23-07-2025- ஒரு கிராம் ரூ.129
22-07-2025- ஒரு கிராம் ரூ.128
21-07-2025- ஒரு கிராம் ரூ.126