வணிகம் & தங்கம் விலை

Stock market today: இன்றைய வர்த்தக முடிவில் 1000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 5.27 சதவிதம் உயர்ந்தது.
- சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூர்போ பங்குகளும் உயர்வு.
பங்குச் சந்தை வர்த்தகத்தில் இன்று மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி ஆகியவை ஏற்றத்துடன் முடிவடைந்தது.
கடந்த இரண்டு வாரங்களில் ஏழு நாட்கள் சரிவை சந்தித்த பங்குச் சந்தை இன்று ஏற்றத்தை கண்டது.
கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 79,212.53 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 79,343.63 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக 79,341.35 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 80,321.88 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 1,005.84 புள்ளிகள் உயர்ந்து 80,218.37 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
அதேபோல் இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 289.15 புள்ளிகள் உயர்ந்து 24,328.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் பங்கு இன்றைய வர்த்தகத்தில் 5.27 சதவிதம் உயர்ந்தது. மார்ச் மாத காலாண்டில் நிகர லாபம் 2.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிறுவனத்தின் அறிவிப்பு இந்த உயர்வுக்கு காரணமாகும்.
555 கோடி ரூபாய்க்கு எஸ்.எம்.எம். இசுசு நிறுவனத்தை கையகப்படுத்தியதாக அறிவித்ததால் மஹிந்திரா அண்டு மஹிந்திரா நிறுவன பங்கு 2.29 சதவீதம் அதிகரித்தது.
சன் பார்மா, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், லார்சன் அண்டு டூர்போ, ஐசிசிஐ வங்கி நிறுவன பங்குகளும் உயர்வை சந்தித்தன.
ஹெச்.சி.எல். டெக், அல்ட்ராடெக் சிமெண்ட், நெஸ்லே, இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.