என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் திருட்டு- வாலிபர் கைது
    X

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் தூத்துக்குடி வியாபாரியிடம் ரூ. 5 லட்சம் திருட்டு- வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நோட்டமிட்ட அந்த நபர் செல்வகுமாரின் பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையில் இறங்கினர்.

    வேலூர்:

    தூத்துக்குடியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 39). இவர் திருப்பதியில் பால்கோவா கடை நடத்தி வருகிறார்.

    செல்வகுமார் திருப்பதியில் இருந்து தூத்துக்குடி செல்வதற்காக அரசு பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது கைப்பையில் ரூ. 5 லட்சம் பணத்தை வைத்திருந்தார்.

    பஸ் வேலூர் புதிய பஸ் நிலையம் வந்ததும் வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவர் செல்வகுமாரிடம் எனக்கு பணம் தேவைப்படுகிறது. நான் உங்களுக்கு யு.பி.ஐ மூலம் பணம் அனுப்புகிறேன். எனக்கு பணமாகக் கொடுங்கள் என கேட்டுள்ளார் .

    தொடர்ந்து செல்வகுமார் பஸ்சிலிருந்து கீழே இறங்கி அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். இதனை நோட்டமிட்ட அந்த நபர் செல்வகுமாரின் பையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம் போட்டார். அதற்குள் அந்த நபர் அங்கிருந்து மாயமானார். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணையில் இறங்கினர்.

    பணத்தை திருடி சென்ற தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை அடுத்த விஸ்வாசபுரத்தை சேர்ந்த கதிர்வேல் (28) என்பவரை போலீசார் மதுரையில் வைத்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×