இந்தியா

2 குழந்தைகளை எரித்துக்கொன்று இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
- தாயும், மகள்களும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
- தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருநாகப்பள்ளி அருகே உள்ள குலசேகரபுரம் பகுதியை சேர்ந்தவர் கிரிஷ்குமார். இவரது மனைவி தாரா கிருஷ்ணன் (வயது36). இவர்களது மகள்கள் அனாமிகா(6), ஆத்மிகா(1 ).
கிரிஷ்குமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் தனது கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தாரா தனது 2 மகள்களுடன் குலசேகரபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் தனது தந்தையுடன் வசித்துவந்தார். கடந்த ஒன்றரை ஆண்டாக அந்த வீட்டில் தான் வசித்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில் நேற்று மாலை தாராவின் தந்தை கோபாலகிருஷ்ணன் டீ குடிப்பதற்காக டீக்கடைக்கு சென்றிருந்தார். தாரா தனது குழந்தைகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அவர்களது வீட்டின் உள்ளே இருந்து குபுகுபுவென புகை வந்தது.
இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்து வீட்டினர், கதவை உடைத்து தாராவின் வீட்டுக்குள் சென்றனர். அப்போது அங்கு தாரா மற்றும் அவரது 2 மகள்கள் உடல் கருகிய நிலையில் கிடந்தனர். இதுகுறித்து கருநாகப்பள்ளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து தீணை அணைத்தனர். பின்பு வீட்டுக்குள் உயிருக்கு போராடியபடி கிடந்த தாரா மற்றும் அவரது மகள்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
அதில் தாரா தனது 2 குழந்தைகளின் உடலில் தீவைத்துவிட்டு தானும் தீவைத்துக்கொண்டது தெரியவந்தது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த தாரா மற்றும் அவரது 2 மகள்களும் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து இறந்தனர்.
தாரா தனது 2 குழந்தை களை எரித்துக் கொன்று தற்கொலை செய்தது ஏன்? என்று போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி னர். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்தன. தாராவுக்கும் அவரது கணவரின் குடும்பத்தின ருக்கும் பிரச்சினை ஏற்பட் டுள்ளது. இதனால் தாரா தனது கணவரின் வீட்டில் வசிக்காமல், தனியாக வந்து தனது தந்தை மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்திருக்கிறார்.
இந்தநிலையில் துபாயில் வேலை பார்த்து வரும் தாராவின் கணவர் கிரிஷ்குமார் விடுமுறையில் ஊருக்கு வர இருந்தார். அவர் துபாயில் இருந்து நேற்று புறப்பட்டு வர இருந்த நிலையில், சில காரணங்களுக்காக அங்கிருந்து புறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் சொத்து தொடர்பாக தாரா மற்றும் அவரது மாமியாருக்கு இடையே நேற்று பிரச்சினையும் நடந்துள்ளது. அப்போது தாரா தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்திருக்கிறார்.
இந்தநிலையில் தான் தாரா தனது குழந்தைகளை உயிரோடு எரித்துக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்தி ருக்கிறார்.
கணவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளை உயிரோடு எரித்துக்கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.