என் மலர்

    இந்தியா

    ஓடும் காரில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை.. சாலையோரம் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்
    X

    ஓடும் காரில் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை.. சாலையோரம் தூக்கி வீசப்பட்ட இளம்பெண்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கார் நகர்ந்து கொண்டிருக்கும் போதே தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார்.
    • காலை சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

    மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள லோனாவாலாவில் 23 வயது பெண் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்படி, அவர் வெள்ளிக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு கார் அருகில் நின்றது என்றும் அதில் இருந்த ஒரு நபர் தன்னை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

    பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, கார் நகர்ந்து கொண்டிருக்கும் போதே தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறினார்.

    துங்கார்லி பகுதியில் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தொடர்ச்சியான பாலியல் வன்கொடுமைக்கு பிறகு, சனிக்கிழமை அதிகாலை சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

    இதையடுத்து, லோனாவாலா நகர காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்துள்ளார். முதலில், மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் கூறியிருந்தார்.

    ஆனால், காவல்துறையின் விசாரணையில், காருக்குள் ஒரே ஒரு நபர் மட்டுமே இருந்ததும், அந்த நபர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த வழக்கில் துங்கார்லியைச் சேர்ந்த 35 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    Next Story
    ×