என் மலர்

    இந்தியா

    கேரளாவில் கனமழை - 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
    X

    கேரளாவில் கனமழை - 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கேரளாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பெய்த கனமழை மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பல பகுதிகள் இருளில் மூழ்கின.

    இந்நிலையில் கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இடுக்கி மற்றும் எர்ணாகும் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயம், காஞ்சிரப்பள்ளி மற்றும் மீனாச்சில் ஆகிய 3 தாலுக்காக்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோட்டம் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.

    பத்தனம்திட்டாவில் மணிமாலா மற்றும் பம்பா, காசர்கோட்டில் மொக்ரல் மற்றும் கொல்லத்தில் பள்ளிக்கல் உள்ளிட்ட பல ஆறுகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரைகளுக்கு அப்பால் ஜூலை 27-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×