இந்தியா

கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு- 8 மாவட்டங்களுக்கு அபாய எச்சரிக்கை
- மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு பசிபிக் பெருங்கடலில் உருவான வெப்பமண்டல புயல் விபா காரணமாக கேரள மாநிலம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலவீனமடைந்துள்ள சூறாவளி புயல் அடுத்த 24 மணி நேரத்திற்குள் வங்காள விரிகுடாவில் நுழையும் என்பதால் அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த மழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 64.5 முதல் 115.5 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என்பதால் இந்த 8 மாவட்டங்களுக்கும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த காலத்தில் மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.