என் மலர்

    இந்தியா

    பிறந்தநாள் விழாவில் மனைவி குத்திக்கொலை- கணவர் வெறிச்செயல்
    X

    பிறந்தநாள் விழாவில் மனைவி குத்திக்கொலை- கணவர் வெறிச்செயல்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிறந்தநாள் விழாவில் சிறுமி கேக் வெட்டும் நிகழ்ச்சிகளை சமக்கா செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து ஹயாத் நகரில் பதுங்கி இருந்த ஸ்ரீனுவை கைது செய்தனர்.

    தெலுங்கானா மாநிலம் அப்துல்லாபூர் மெட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 50). இவரது முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் சமக்கா (35) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

    கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். சமக்கா சூர்யா பேட்டையில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஸ்ரீனுவின் சகோதரி மகள் ராஜேஸ்வரியின் 14 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள ஸ்ரீனு மற்றும் அவரது 2-வது மனைவி சமக்காவுக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

    பிறந்தநாள் விழாவில் சிறுமி கேக் வெட்டும் நிகழ்ச்சிகளை சமக்கா செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு வந்த ஸ்ரீனு தன்னிடமிருந்த கத்தியை எடுத்து சமக்கா கழுத்தில் 3 இடங்களில் சரமாரியாக குத்தினார். அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. பிறந்தநாள் விழாவில் இருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டனர்.

    பின்னர் ஸ்ரீனு அங்கிருந்து தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த சமக்கா சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சமக்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹயாத் நகரில் பதுங்கி இருந்த ஸ்ரீனுவை கைது செய்தனர்.

    Next Story
    ×