என் மலர்

    இந்தியா

    தாக்குதலுக்கு ரெடியாகும் இந்திய ராணுவம்?.. பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை
    X

    தாக்குதலுக்கு ரெடியாகும் இந்திய ராணுவம்?.. பிரதமர் மோடியுடன் ராஜ்நாத் சிங் தீவிர ஆலோசனை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மிரட்டலை கண்டு கொள்ளாத இந்திய ராணுவம் தொடர்ந்து தனது படைப்பலத்தை தயார் செய்து வருகிறது.
    • பாராளுமன்ற பாதுகாப்பு நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

    காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 26 அப்பாவி சுற்றுலா பயணிகளை ஈவுஇரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

    அந்த தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியை இந்திய பாதுகாப்பு படையினர் தீவிரப்படுத்தி வருகிறார்கள். காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி களுக்கு உதவி செய்தவர்க ளும் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள்.

    பகல்காம் தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று பிரதமர் மோடி 2 தடவை அறிவித்து உள்ளார். எனவே இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகு திக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

    இதை உறுதிப்படுத்தும் வகையில் அரபிக் கடலில் இந்திய போர் கப்பல்கள் அக்ரான் என்ற பெயரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் எல்லைப் பகுதிகளில் ராணுவத்தினரின் பயிற்சி அதிகரித்துள்ளது. ராணுவ வாகனங்களும் அதிகமாக செல்ல தொடங்கி உள்ளன.

    இந்தியாவின் பதிலடி திட்டத்துக்கு உலகின் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பயந்துபோய் இருக்கும் பாகிஸ்தான் தனது போர் விமானங்களை இந்திய எல்லை அருகே குவித்து வருகிறது. இந்தியா தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்று ஆலோசித்து வருகிறது.

    எங்களிடம் 130 அணு ஆயுதங்கள் இருக்கின்றன என்று பூச்சாண்டி காட்டியபடி இருக்கிறது. பாகிஸ்தானின் இந்த மிரட்டலை கண்டு கொள்ளாத இந்திய ராணுவம் தொடர்ந்து தனது படைப்பலத்தை தயார் செய்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மோடியை மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் சந்தித்து பேசினார். சுமார் 40 நிமிடங்கள் அவர்களது பேச்சு நீடித்தது.

    அப்போது தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவல் உடன் இருந்தார். தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் மோடியும், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங்கும் பல்வேறு விசயங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களது சந்திப்பு முக்கிய மானதாக கருதப்படுகிறது.

    பகல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக அவர்கள் இருவரும் நீண்ட நேரம் விவாதித்ததாக தெரிகிறது. பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக அவர்கள் இன்று முக்கிய முடிவுகள் எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    இன்று பிற்பகல் பாராளு மன்ற பாதுகாப்பு நிலைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பகல்காம் தாக்குதல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு அந்த நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். அதன் பேரில் பல நடவடிக்கைகள் தொடங்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×