இந்தியா

ஆர்சிபி மைதான கூட்ட நெரிசல்: நீதிபதி குன்காவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டது கர்நாடக அமைச்சரவை
- ஆர்சிபி ஐபிஎல் சாம்பியன் கொண்டாட்டத்தின்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் பலி.
- கூட்டல் நெரிசல் தொடர்பாக நீதிபதி குன்கா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது.
ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வென்றது. 18 வருட ஐபிஎல் தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டத்தை பிரமாண்டமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் ஆர்சிபி அணி வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அப்போது அணி வீரர்களை பார்ப்பதற்காக லட்சக்கணக்கில் ரசிகர்கள் திரண்டனர். இதனால் மைதான வாசலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய ஜான் மைக்கேல் குன்கா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இன்று கர்நாடக மாநில அமைச்சரவை கூடியது. இந்த கூட்டத்தில் குன்கா அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த அறிக்கையில் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில சட்ட அமைச்சர் ஹெச்.கே. பாட்டில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கூறியபடி பார்த்தால் ஆர்சிபி, தனியார் அமைப்புகள் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம், டிஎன்ஏ என்டர்டைமென்ட் நெட்வொர்க்ஸ் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.