இந்தியா

பெங்களூருவில் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் நகை கடையில் கொள்ளை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
- 184 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர்.
- போலீசார் விரைந்து வந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூர் மகடி சாலையில் ஒரு பிரபலமான நகை கடை உள்ளது. இந்த கடையை இரவு அடைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது முகமூடி அணிந்தப்படி துப்பாக்கியுடன் 3 பேர் திடீரென கடைக்குள் நுழைந்தனர். பின்னர் அந்த மர்மநபர்கள் நகை கடை உரிமையாளரை மிரட்டி 184 கிராம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்றனர்.
அப்போது எதிர்ப்பு தெரிவித்த நகை கடை உரிமையாளரை துப்பாக்கியை காட்டி அவர்கள் மிரட்டினர்.
தொடர்ந்து மர்ம நபர்கள் நகையுடன் வெளியேறி தப்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து நகை கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது கொள்ளையர்கள் முகமூடியுடன் துப்பாக்கியை காட்டி மிரட்டிய காட்சிகள் பதிவாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த மாதம் இதேபோல் பெங்களூருவில் பட்டப்பகலில் ஒரு நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்தது. எனவே 2 கொள்ளையிலும் ஈடுபட்டது ஒரே கும்பலா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.