என் மலர்

    இந்தியா

    தண்ணீரில் அதிசயம்: 30 வருடங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் ஏரி முழுவதும் பூத்துக் குலுங்கும் தாமரை
    X

    தண்ணீரில் அதிசயம்: 30 வருடங்களுக்குப் பிறகு ஜம்மு-காஷ்மீர் ஏரி முழுவதும் பூத்துக் குலுங்கும் தாமரை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 1992ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கால் ஏரி முற்றிலும் சிதைந்துபோனது.
    • பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது தாமரை பூக்கள் மலர்ந்துள்ளன.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள ஹராமுக்த் மலை அடிவாரத்தில் இருந்து பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் நகர் வரை 24 கி.மீ. தூரத்திற்கு (200 ச.கி.மீ.) வுலார் என்ற ஏரி பரந்து விரிந்துள்ளது.

    இந்த ஏரி சுத்தமான நீரை கொண்ட 2ஆவது ஆசிய ஏரி என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ஏரியில் தாமரை பூத்துக் குலுங்கும். போர்வை போர்த்தியது போல் ஏரி காட்சி அளிக்கும். இந்த ஏரிக்கு கடந்த 1992ஆம் ஆண்டு சோதனை ஏற்பட்டது.

    கடந்த 1992ஆம் ஆண்டு கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏரி அதன் உருவத்தை இழந்தது. ஏரி முழுவதும் வண்டல் மண்ணால் சூழப்பட்டது. இதனால் தாமரை மலர்களும் அழிந்துபோனது. பல்வேறு அமைப்புகள் மீண்டும் தாமரை மலர்கள் வளர முயற்சி மேற்கொண்டன. ஆனால் அதற்கு வெற்றி கிடைக்கவில்லை.

    ஏரியில் உள்ள வண்டல் மணல் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில் தற்போது தாமரை விதைகள் தூவப்பட்டன. தற்போது தாமரை பூத்துக் குலுங்கி காட்சி அளிக்கின்றன. சுமார் 30 வருடங்கள் கழித்து தாமரைகள் ஏரியை போர்வையால் போர்த்தியபோல் காட்சி அளிக்கின்றன.

    Next Story
    ×