இந்தியா

கார்கில் போர் வீரர் வீட்டில் புகுந்து இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டிய கும்பல்
- வங்கதேச குடிமக்கள் எனக்கூறி இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
- அத்துமீறிய கும்பலில் சீருடையில் இல்லா காவலர்கள் இருந்ததாக குடும்பத்தினர் குற்றச்சாட்டினர்.
மகாராஷ்டிரா மாநிலம் பயனே நகரில் கார்கில் போர் வீரர் ஹக்கிமுதீன் ஷேக் (58) வீட்டுக்குள் 60 பேர் கொண்ட கும்பல் புகுந்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கார்கில் போர் வீரர் வீட்டில் புகுந்த கும்பல், அவர்களை வங்கதேச குடிமக்கள் எனக்கூறி இந்திய குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மிரட்டியுள்ளனர்.
அத்துமீறிய கும்பலில் சீருடையில் இல்லா காவலர்கள் இருந்ததாக ஹக்கிமுதீன் ஷேக் குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.
Next Story