இந்தியா

6 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கிய தாய்
- வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- பிரியங்கா உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டார்.
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் பெண் ஒருவர் தனது 6 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
நவி மும்பை, கன்சோலி பகுதியில் வசித்து வரும் பிரியங்கா காம்ப்ளே (26) கடந்த ஏப்ரல் 23 இரவு, தனது 6 வயது மகள் வைஷ்ணவியை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, வீட்டின் மேற்கூரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பிரியங்கா உயர் ரத்த அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்ததாகவும் அவரது கணவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
முதலில் விபத்து மரணம் என போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஆனால், தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் மரணம் கழுத்தை நெரித்ததால் ஏற்பட்டதாகக் தெரியவந்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]