இந்தியா

மரங்களை கட்டிப்பிடித்தால் மன அமைதி கிடைக்கும்- ஆந்திர பள்ளிகளில் புதிய முறை அறிமுகம்
- மரங்களை 2 நிமிடம் கட்டி பிடிப்பதால் மன அமைதி மற்றும் மன அழுத்தம் குறைகிறது.
- இதே நடைமுறையை ஆந்திராவில் உள்ள மற்ற பள்ளிகளிலும் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டம் முடிகுப்பாவில் உள்ள தனியார் பள்ளியில் மரத்தை கட்டிப்பிடிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று காலை பள்ளி வளாகத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்று கூடினர். பின்னர் ஆசிரியர்கள், மாணவர்கள் மரத்தை கட்டி பிடித்தனர்.
2 நிமிடங்கள் மரங்களை கட்டிப்பிடித்தபடி நின்றனர். மரத்தை கட்டி பிடித்ததால் ஒரு விதமான மன அமைதி கிடைக்கும், இந்த நடைமுறை தங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுத்துள்ளது என தெரிவித்தனர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில்:-
மரங்களை 2 நிமிடம் கட்டி பிடிப்பதால் மன அமைதி மற்றும் மன அழுத்தம் குறைகிறது. மேலும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் வெளிப்படுகிறது.
மரத்தை கட்டிப்பிடிக்கும் நிகழ்ச்சி வாரம் ஒரு முறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார். இதே நடைமுறையை ஆந்திராவில் உள்ள மற்ற பள்ளிகளிலும் கொண்டு வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.