என் மலர்

    இந்தியா

    மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி.. பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
    X

    மீண்டும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி.. பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
    • இதனால், அவை நடவடிக்கைகள் பாதித்தன.

    கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இரு அவைகளிலும் முதல் நாளில் இருந்தே அமளியில் ஈடுபட்டு வந்தனர் .

    இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு பாரளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின.

    அப்போது பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி தொடர்பாக விவாதிக்கக்கோரி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் பாதித்தன.

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை மதியம் 2 மணிவரையும், மாநிலங்களவை இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

    Next Story
    ×