இந்தியா

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு அரசுக்கு உதவுவதாகவே இருக்கும்: குலாம் நபி ஆசாத்
- அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தால், சட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என அரசு மகிழ்ச்சியாகிவிடும்.
- நீங்கள் அவையை நடத்த அனுமதிக்கவில்லை என்றால், பிறகு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள்?.
பாராளுமன்ற நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகள் பங்கேற்காதது, அரசுக்கு சட்டங்களை நிறைவேற்ற எளிதாக இருக்கும் என முன்னாள் பாராளுமன்ற விவகாரத்தை துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குலாம் நபி ஆசாத் கூறியதாவது:-
அவை செயல்படுவதற்கு இடையூறு செய்வதை நான் எதிர்க்கிறேன். நீங்கள் அவையை நடத்த அனுமதிக்கவில்லை என்றால், பிறகு ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறீர்கள்?.
பாராளுமன்றத்தில் அரசுக்கு முன்பாக தேசிய, சர்வதேச, உள்நாட்டு பிரச்சினைகளை எழுப்புவீர்கள் என்பதுதான் அவைக்குள் நுழைவதற்கான அர்த்தம். அவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தால், சட்டங்களை எளிதாக நிறைவேற்ற முடியும் என அரசு மகிழ்ச்சியாகிவிடும். ஆகவே, வெளிநடப்பு அரசுக்கு உதவுவதாகவே இருக்கும். அவர்களுக்கு எதிராக இருக்காது.
இவ்வாறு குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
Next Story