இந்தியா

டீ செலவுக்கு வச்சிக்கோங்க.. என் காதல் உங்க கையில் தான் இருக்கு - SSLC விடைத்தாளில் மன்றாடிய மாணவர்கள்
- இந்த 500 ரூபையை டீ செலவுக்கு வச்சிக்கோங்க சார், பாஸ் பண்ணிவிடுங்க.
- நீங்க பாஸ் பண்ணலனா, என் பெற்றோர்கள் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டாங்க.
கர்நாடக மாநிலத்தின் பெல்காவி மாவட்டத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு SSLC தேர்வில் பங்கேற்ற சில மாணவர்கள் விடைத்தாளில் பணதை இணைத்து வைத்த கோரிக்கைகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தகவலின்படி, சில மாணவர்கள் "பாஸ் பண்ணுங்க, என் காதல் உங்கள் கையில் தான். நான் பாஸ் ஆனால்தான் என் காதல் தொடரும்" என்ற கோரிக்கைகளை எழுதி வைத்துள்ளனர்.
அதில் ஒரு மாணவர் ரூ.500 பணத்தை விடைத் தாளில் இணைத்து, "இந்த 500 ரூபையை டீ செலவுக்கு வச்சிக்கோங்க சார், பாஸ் பண்ணிவிடுங்க" என கேட்டுள்ளார்.
மேலும், "நீங்க பாஸ் பண்ணினா பணம் தர்றேன்" என்று சில சில மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களில் எழுதி வைத்துள்ளனர்.
ஒரு மாணவர், "நீங்க பாஸ் பண்ணலனா, என் பெற்றோர்கள் என்னை கல்லூரிக்கு அனுப்ப மாட்டாங்க" என எழுதியுள்ளார்.
Next Story