என் மலர்

    இந்தியா

    ராஜஸ்தானில் 600 கி.மீ. காரில் தேடிவந்த காதலியை கொன்று வீசிய ஆசிரியர்
    X

    ராஜஸ்தானில் 600 கி.மீ. காரில் தேடிவந்த காதலியை கொன்று வீசிய ஆசிரியர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
    • காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார்.

    ராஜஸ்தான் மாநிலம் ஜின்ஜின்னுவை சேர்ந்தவர் முகேஷ் குமாரி (வயது 37).

    இவர் அங்கன்வாடி மேற்பார்வையாளராக வேலை செய்து வந்தார். கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் பர்மாரை சேர்ந்த ஆசிரியர் மனாராம் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார். இவர்கள் இருவரும் பேஸ்புக் மூலம் நீண்ட நேரம் அரட்டை அடித்து வந்தனர்.

    பின்னர் தங்களது செல்போன்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். அப்போது மனோராம் முகேஷ் குமாரியை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்தார்.

    மனாராம், முகேஷ் குமாரியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

    கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக முகேஷ் குமாரி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என மனாராமை வற்புறுத்தி வந்தார். அவர் திருமணம் செய்யாமல் காலதாமதம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் முகேஷ் குமாரி நேற்று முன்தினம் தனது காரை எடுத்துக்கொண்டு 600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காதலன் வீட்டுக்கு காரில் சென்றார். தங்களுடைய காதல் விவகாரம் குறித்து மனாராமின் குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

    இதனால் மனாராம் ஆத்திரம் அடைந்தார்.

    முகேஷ் குமாரியை காரில் புறநகர் பகுதிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முகேஷ் குமாரியின் தலையில் பலமாக தாக்கினார். இதில் முகேஷ் குமாரி மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பின்னர் காதலியின் உடலை தூக்கி முள்புதரில் வீசிவிட்டு சென்றுவிட்டார். அந்த வழியாக சென்றவர்கள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு வீசி இருப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் காட்சியை வைத்து மனாராமை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    Next Story
    ×