என் மலர்

    இந்தியா

    இந்தியர்களின் ரத்தத்தில் லாபம் பார்க்காதீர்: பிசிசிஐ அமைப்பை சாடிய சிவசேனா எம்.பி.
    X

    இந்தியர்களின் ரத்தத்தில் லாபம் பார்க்காதீர்: பிசிசிஐ அமைப்பை சாடிய சிவசேனா எம்.பி.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது.
    • இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதுகின்றன.

    மும்பை:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது. அதில், ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

    இந்தியா, பாகிஸ்தான் அணிகள் செப்டம்பர் 14-ம் தேதி மோதும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா, பாகிஸ்தான் அணிகளை ஒரே குழுவில் இடம்பெறும்படி அட்டவணை தயாரிக்கப்பட்டிருப்பது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

    இந்நிலையில், உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் எம்.பி.யான பிரியங்கா சதுர்வேதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:

    கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தானுடனான எந்தவொரு போட்டியையும் நீங்கள் எந்த நாட்டிற்கு மாற்றினாலும், இந்தியர்களான நாங்கள் அனைவரும் அதனை எதிர்ப்போம் என்பதை பிசிசிஐ நினைவில் கொள்ள வேண்டும்.

    இந்திய மக்கள் மற்றும் ஆயுதப்படை வீரர்களின் ரத்தத்திலிருந்து உங்களின் லாபத்தை நிறுத்துங்கள்.

    ஒருபக்கம், நம் பாதுகாப்புப் படைத் தலைமை அதிகாரி அனில் சவுகான் ஆபரேஷன் சிந்தூர் நடந்து கொண்டிருக்கிறது என கூறுகிறார். மறுபக்கம், ரத்தத்தில் லாபம் பார்க்க நினைக்கிறீர்கள் நீங்கள் என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×