என் மலர்

    இந்தியா

    சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் - ரூ.2 கோடியை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தந்திரி
    X

    சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம் - ரூ.2 கோடியை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த தந்திரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தங்கம் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலமாக ரூ.2 கோடி பெற்றதாக தகவல் வெளியானது.
    • நிதி நிறுவனம் தற்போது நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

    சபரிமலையில் தங்கம் கொள்ளை போன விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் சபரிமலை முதன்மை தந்திரி கண்டரரு ராஜீவரு உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    சிறையில் உள்ள தந்திரி கண்டரரு ராஜீவரிடம் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தங்கம் கொள்ளை தொடர்பாக உன்னிகிருஷ்ணன் போற்றி மூலமாக ரூ.2 கோடி பெற்றதாக தகவல் வெளியானது.

    இந்த பணத்தை தந்திரி திருவல்லாவில் இயங்கி வந்த ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்ததாக கூறப்பட்டது. ஆனால் அந்த நிதி நிறுவனம் தற்போது நஷ்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் தந்திரி முதலீடு செய்த பணம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மூடப்பட்ட நிதி நிறுவனத்திலும், அதை நடத்தி வந்த என்.எம்.ராஜு வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தினர்.

    நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் ராஜு ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தந்திரி முதலீடு செய்ததாக கூறப்படும் ரூ.2 கோடி தொடர்பாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×