என் மலர்

    இந்தியா

    நிறைபுத்தரிசி பூஜை - சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு
    X

    நிறைபுத்தரிசி பூஜை - சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மறுநாள் திறப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நிறைபுத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ளது.
    • சபரிமலையில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்களும் அறுவடை செய்யப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நிறைபுத்தரிசி பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜையில் வைத்து பிரசாதமாக வழங்கப்படும் நெற்கதிர்களை வீட்டில் வைத்து பாதுகாத்து வந்தால் சகல ஐஸ்வர்யங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    இந்த ஆண்டுக்கான நிறைபுத்தரிசி பூஜை வருகிற 30-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெற உள்ளது. இதற்காக கோவில் நடை நாளை மறுநாள் (29-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

    மறுநாள் (30-ந் தேதி) நிறைபுத்தரிசி பூஜை வழிபாடுகள் நடைபெறும். இதற்காக பாரம்பரிய முறைப்படி பாலக்காடு , கொல்லம் பகுதிகளில் இருந்து ஐயப்ப சேவா சங்கத்தினர் நெற்கதிர் கட்டுகளை சபரிமலைக்கு தலைச்சுமையாக எடுத்து வருவார்கள்.

    இதேபோல் சபரிமலையில் பயிரிடப்பட்டுள்ள நெற்கதிர்களும் அறுவடை செய்யப்பட்டு கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் அவை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படும். நிறைபுத்தரிசி பூஜை வழிபாட்டுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.

    Next Story
    ×