இந்தியா

சண்டிகரில் சைரன் எச்சரிக்கை.. வான்வழித் தாக்குதல் அபாயம் - மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்
- நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.
- விமானப்படை தளத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி விடுக்கபட்டுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று இரவு முழுவதும் இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தின.
ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் ஏவிய டிரோன்கள், ஏவுகணைகளை இந்திய ராணுவம் திறம்பட இடைமறித்து அழித்தது.
நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய பாகிஸ்தானின் அத்துமீறல் விடிய விடிய நடைபெற்றது.
இந்நிலையில் இன்று பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகரமாக விளங்கும் சண்டிகரில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டுள்ளது. சண்டிகரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து எச்சரிக்கை ஒலி விடுக்கபட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்றும் பால்கனியில் நிற்க கூடாது எனவும் விமானப்படை மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வான்வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.