என் மலர்

    இந்தியா

    போரை பற்றி பேசுவதை நிறுத்துவிட்டு, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: மெகபூபா முப்தி
    X

    போரை பற்றி பேசுவதை நிறுத்துவிட்டு, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்: மெகபூபா முப்தி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோதலின்போது காஷ்மீர்தான் கஷ்டங்களை எதிர்கொண்டது.
    • எனவே ஒரு காஷ்மீரி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரவில்லை என்றால், வேறு யார் கோருவார்கள்?.

    பாகிஸ்தானுடன் போர் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி நல்லிணக்கத்திற்கான பாதையை மேற்கொள்வது பற்றி பேசுங்கள் என ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள ஜனநாயக கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக மெகபூபா முப்தி கூறியதாவது:-

    ஜம்மு-காஷ்மீர் மக்கள் உங்களுடைய எதிரி இல்லை என்பதை மத்திய அரசுக்கு சொல்ல விரும்புகிறேன். நாங்கள் கண்ணியத்துடன் கூட அமைதியை விரும்புகிறோம். நட்பு மூலமாக அமைதியை விரும்புகிறோம். நாங்கள் போர் மூலம் அமைதியை விரும்பவில்லை. பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது காஷ்மீரில் நடந்தது என்ன? என்பதை விளக்குவதற்காக நீங்கள் எம்.பி.க்கள் குழுவை உலக நாடுகளுக்கு அனுப்பினீர்கள்.

    மோதலின்போது காஷ்மீர்தான் கஷ்டங்களை எதிர்கொண்டது. எனவே ஒரு காஷ்மீரி பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரவில்லை என்றால், வேறு யார் கோருவார்கள்?.

    நம்முடைய நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமென்றால், போரை பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை குறித்து பேச வேண்டும். உலகில் உங்கள் திறமையை நிரூபிக்கவும், சீனாவை வெல்லவும் விரும்பினால், ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு நல்லிணக்கப் பாதையை மேற்கொள்ளுங்கள்.

    இவ்வாறு மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×