இந்தியா

1000 கோடி ரூபாய் டெண்டர் மோசடி: நிதிஷ் குமார் கட்சி மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு
- நிதிஷ் குமார் கட்சி வைத்திருக்கும் ஊரக பணிகள் துறை மூலமாக தேர்தலுக்கு முன்னதாக 1000 கோடி ரூபாய் விடுவிக்க அக்கட்சி இலக்கு.
- அரசாங்கம் வெளியேறப் போகிறது என்பதை மற்ற அமைச்சர்கள் நன்கு அறிவார்கள்.
பீகார் மாநிலத்தில் இந்த வருடம் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் ஊரக வேலைகள் துறைக்கு (RWD) 1000 கோடி ரூபாய் விடுவிக்க இருப்பதாக ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தேஜஸ்வி யாதவ் கூறுகையில் "தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை முதல்வர், சீனியர் அமைச்சர் ஒரு கூட்டத்தில் ஊழல் கொள்ளை தொடர்பாக மோதிக் கொண்டனர்.
நிதிஷ் குமார் கட்சி வைத்திருக்கும் ஊரக பணிகள் துறை மூலமாக தேர்தலுக்கு முன்னதாக 1000 கோடி ரூபாய் விடுவிக்க, அக்கட்சி இலக்கு வைத்துள்ளது. இந்தப் பணம் உலகளாவிய டெண்டர் மூலம் ஒப்பந்ததாரர்களிடமிருந்து பெறப்பட உள்ளது.
தேர்தலுக்கு முன்பு கிராமப்புற சாலைகள் எதுவும் அமைக்கப்படுவதில்லை, ஆனால் டெண்டர் செயல்முறையை நிர்வகிப்பதன் மூலம் ஒரு கொள்ளையடிக்கும் விளையாட்டு நடந்து வருகிறது.
முதல்வர் சுயநினைவில் இல்லை, அமைதியாக இருக்கிறார். அரசாங்கம் வெளியேறப் போகிறது என்பதை மற்ற அமைச்சர்கள் நன்கு அறிவார்கள். எனவே, கொள்ளையடிப்பதற்கான வெளிப்படையான போராட்டம் உள்ளது.
இவ்வாறு தேஜஸ்வி தெரிவித்துள்ளார்.