என் மலர்

    இந்தியா

    மக்களை ஏமாற்றுபவர்கள்தான் சிறந்த தலைவர்கள் -   உண்மையை உடைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
    X

    மக்களை ஏமாற்றுபவர்கள்தான் சிறந்த தலைவர்கள் - உண்மையை உடைத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • எனது துறையில் வெளிப்படையாக உண்மையை சொல்வதை யாரும் விரும்பவில்லை.
    • மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்த தலைவர் தான் எப்போதும் வெற்றி பெறுகிறார்.

    மக்களை ஏமாற்றத் தெரிந்தவர் தான் சிறந்த தலைவர் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் அகில பாரத மகானுபவ பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் நேற்று நிதின் கட்கரி பங்கேற்றார்.

    அப்போது பேசிய அவர், "மக்களை ஏமாற்ற தெரிந்தவர் தான் சிறந்த அரசியல்வாதி. எனது துறையில் வெளிப்படையாக உண்மையை சொல்வதை யாரும் விரும்பவில்லை.

    எல்லாருக்கும் அவரவருக்கான நோக்கங்கள் உள்ளன. மக்களை ஏமாற்றி நம்பவைக்கத் தெரிந்த தலைவர் தான் எப்போதும் வெற்றி பெறுகிறார்.

    ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அதாவது, உண்மையே இறுதியில் வெல்லும் என பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் எழுதியிருக்கிறார்.

    வேண்டிய விஷயங்களை சாதிக்க பல குறுக்கு வழிகள் இருக்கும். நீங்கள் விதிகளை மீறி, ரெட் சிக்னலை பொருட்படுத்தாமல் கடந்து செல்லலாம், ஆனால் ஒரு தத்துவ ஞானி சொன்னதுபோல், குறுக்குவழிகள் உங்கள் பயணத்தை முடக்கிவிடும்.

    எனவே உண்மை மற்றும் அர்பணிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செயல்படுங்கள்" என தெரிவித்தார்.

    Next Story
    ×