இந்தியா

பாலியல் வழக்கு போடுவதாக மிரட்டி மணமகளின் விதவை தாயை திருமணம் செய்து வைக்க முயற்சி - மணமகன் அதிர்ச்சி
- இவர்கள் இருவருக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
- மணமகள் மந்தாஷாவுக்கு பதில் அவரது 45 வயது தாய் தஹிரா மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்து இருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் பிரம்புரியில் வசித்து வருபவர் முகமது ஆசிம் (வயது 21). இவருக்கும் பசால்பூரை சேர்ந்த மந்தாஷா (21) என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் பேசி முடிக்கப்பட்டது.
கடந்த வாரம் இவர்கள் இருவருக்கும் இடையே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமண வீடு உறவினர்களால் நிரம்பி களை கட்டி இருந்தது. திருமணத்துக்கு முன்பு மணமகளின் பெயர் தஹிரா என அறிவிக்கப்பட்டது.இந்த பெயரை கேட்டு அதிர்ச்சி அடைந்த மணமகன் முகமது ஆசிம் மணமகளின் முக்காடை விலக்கி பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
மணமகள் மந்தாஷாவுக்கு பதில் அவரது 45 வயது தாய் தஹிரா மணப்பெண் அலங்காரத்தில் அமர்ந்து இருந்தார். இவர் விதவை ஆவார். முகமது ஆசிமின் மூத்த சசோதரர் மற்றும் அண்ணி ஆகியோர் ஏமாற்றி இந்த திருமணத்தை நடத்தி வைக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
இது பற்றி கேள்வி கேட்ட முகமது ஆசிமை அவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காவிட்டால் போலியாக பாலியல் புகார் கொடுக்கப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து அவர் மீரட் போலீஸ் சூப்பிரெண்டிடம் தான் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.