என் மலர்

    இந்தியா

    கேரள சிறையில் இருந்து தமிழக வாலிபர் தப்பிய விவகாரம்- சிறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்டு
    X

    கேரள சிறையில் இருந்து தமிழக வாலிபர் தப்பிய விவகாரம்- சிறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பாழடைந்த வீட்டின் கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கியிருப்பது தெரியவந்தது.
    • தப்பி ஓடி பிடிபட்ட கைதி கோவிந்தசாமி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு அருகே கடந்த 2011-ம் ஆண்டு சவுமியா என்ற இளம்பெண் ஓடும் ரெயிலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, ரெயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தமிழகத்தின் விருத்தாசலத்தை சேர்ந்த கோவிந்தசாமி என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு கோர்ட்டு மரண தண்டனை விதித்த நிலையில், உச்சநீதிமன்றம் அதனை ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதனை தொடர்ந்து கோவிந்தசாமி கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஒரு கை ஊனமான அவர், பாதுகாப்பான பிளாக்கில் இருந்து நேற்று காலை திடீரென மாயமானார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் இறங்கினர். சுமார் 3½ மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சிறையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு பாழடைந்த வீட்டின் கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.

    கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தப்பியோடிய கைதி பிடிபட்ட நிலையில் அவர் தப்பிச் சென்றது எப்படி? என உயர் அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர். இதில் சிறை அறையின் 3 இரும்பு கம்பிகளை அறுத்து விட்டு கிழிந்த போர்வைகளை ஒன்றாக கயிறு போல் கட்டி 7.5 மீட்டர் உயரம் உள்ள சிறைச் சுவரை ஏறி தப்பிச் சென்றது தெரிய வந்தது.

    சிறையில் கண்காணிப்பு கேமரா இருந்தும் கோவிந்தசாமி தப்பிச் சென்றதை அதிகாரிகள் கவனிக்காமல் விட்டது எப்படி? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் பல நாட்களுக்கு முன்பிருந்தே சிறையில் இருந்து தப்பிக்க கோவிந்தசாமி திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனால் அவருக்கு சிறைக்குள் இருந்து உதவி கிடைத்ததா? என கண்ணூர் நகர போலீஸ் கமிஷனர் நிதின்ராஜ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் 3 சிறை அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். கைதிகளை மேற்பார்வையிட தவறியதாக கோபுர அதிகாரியான துணை சிறை அதிகாரி ராஜீஸ், அறை பாதுகாப்பு பணி மற்றும் சி.சி.டி.வி. கட்டுப்பாட்டு அறை பணியில் இருந்த உதவி சிறை அதிகாரிகள் சஞ்சய், அகில் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து டி.ஐ.ஜி. ஜெயக்குமார் உத்தரவிட்டு உள்ளார்.

    இதற்கிடையில் தப்பி ஓடி பிடிபட்ட கைதி கோவிந்தசாமி, மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவர் பாதுகாப்பு காரணமாக கண்ணூர் மத்திய சிறையில் இருந்து திருச்சூர் விய்யூர் உயர் பாதுகாப்பு சிறைக்கு இன்று மாற்றப்பட்டார்.

    Next Story
    ×