என் மலர்

    புதுச்சேரி

    புதுச்சேரியில்  தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் தொடங்கியது
    X

    புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் தொடங்கியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
    • பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை.

    புதுச்சேரி:

    நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

    புதுச்சேரி, தமிழ்நாட்டில் இந்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உட்பட மற்ற கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    இந்தநிலையில், புதுச்சேரியில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

    ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் தொடங்கியது. பந்த் காரணமாக புதுச்சேரியில் ஆட்டோ, டெம்போ, தனியார் பேருந்துகள் ஓடவில்லை.

    முழு அடைப்பு போராட்டத்தின்போது அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க மாணவ, மாணவிகளின் நலன் கருதி புதுவையில் பல தனியார் பள்ளிகள் இன்று விடுமுறை அறிவித்துள்ளன.

    Next Story
    ×