என் மலர்

    கிரிக்கெட் (Cricket)

    ஹர்மன்பிரீத் கவுர் போராட்டம் வீண்: இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
    X

    ஹர்மன்பிரீத் கவுர் போராட்டம் வீண்: இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 151 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 142 ரன்களை மட்டுமே எடுத்தது.

    சார்ஜா:

    மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    ஏ பிரிவில் இதுவரை நடைபெற்ற 3 லீக் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி 3 வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளது.

    இந்நிலையில், சார்ஜாவில் இன்று நடைபெற்ற 18வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கிரேஸ் ஹாரிஸ் 40 ரன்னும், மெக்ராத் மற்றும் எலிஸ் பெர்ரி தலா 32 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய அணி சார்பில் ரேணுகா சிங், தீப்தி சர்மா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 20 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 6 ரன்னும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 16 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    4வது விக்கெட்டுக்கு கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உடன் தீப்தி சர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது.

    இருவரும் சேர்ந்து 63 ரன்கள் சேர்த்த நிலையில் தீப்தி சர்மா 29 ரன்னில் அவுட்டானார். ரிச்சா கோஷ் ஒரு ரன்னில் வெளியேறினார்.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து, தனி ஆளாகப் போராடினார்.

    54 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில் இந்திய அணி 142 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    Next Story
    ×