ஐ.பி.எல்.(IPL)

IPL 2025: விராட் கோலி - கே.எல்.ராகுல் இடையே கடும் வாக்குவாதம் - வீடியோ
- கோலி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது கீப்பிங் செய்த ராகுலிடம் சென்று வாக்குவாதம் செய்தார்.
- இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கியபெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.
இந்த போட்டியின் போது வீராட் கோலிக்கும், கே.எல் ராகுலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது.
கோலி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது கீப்பிங் செய்த ராகுலிடம் சென்று வாக்குவாதம் செய்தார். அவரும் பதில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கடுமையான வாக்குவாதத்துக்கு என்ன காரணம் என்று தெளிவாக தெரியவில்லை.