கிரிக்கெட் (Cricket)

3வது ஒருநாள் போட்டி: முதல் சதத்தைப் பதிவு செய்த ஜெய்ஸ்வால்
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 270 ரன்கள் எடுத்தது.
விசாகப்பட்டினம்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 3வது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் டி காக் சதமடித்தார்.
இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஜோடி முதலில் நிதானமாக ஆடியது. அதன்பின் இருவரும் அதிரடியில் இறங்கினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 155 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 75 ரன்னில் அவுட்டானார். அடுத்து விராட் கோலியுடன் ஜெய்ஸ்வால் இணைந்தார்.
இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய ஜெய்ஸ்வால் சதமடித்து அசத்தினார். அவர் 111 பந்துகளில் சதமடித்தார். இதில் ஒரு சிக்சரும், 10 பவுண்டரிகளும் அடங்கும். இது அவரது முதல் சதமாகும்.





