கிரிக்கெட் (Cricket)

ENGvsIND 5th Test கருண் நாயர் ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது: கெவின் பீட்டர்சன்
- பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அரைசதம் அடித்து களத்தில் உள்ளார்.
- 100 ரன்கள் கடப்பார் என நம்புவதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர் கருண் நாயர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இவரது அரை சதத்தால் இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 98 பந்தில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இந்த நிலையில் கருண் நாயர் குறித்து கெவின் பீட்டர்சன் கூறியதாவது:-
நேற்றைய முதல்நாள் நாளில் இந்தியாவின் பேட்டிங்கை நிலை நிறுத்திய கருண் நாயரின் ஆட்டம் மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது ஆட்டத்தில் மிகப்பெரிய அளவில் கடின உழைப்பை போட்டுள்ளார். இங்கிலாந்தில் பேட்டிங் செய்வது குறித்து ஐபிஎல் தொடரின்போது, பலமணி நேரம் நாங்கள் இருவரும் பேசியுள்ளோம். இன்று அற்புதமான 100 ரன்களை கடப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு கருண் நாயர் தெரிவித்துள்ளார்.