கிரிக்கெட் (Cricket)

புறக்கணிப்பா அல்லது யு-டர்ன்-ஆ? 24 மணி நேரத்தில் பதில் கிடைக்கும்: PCB தலைவர் நக்வி சொல்கிறார்
- எங்களுடைய விருந்தினருக்கு நாங்கள் வரவேற்பு அளித்தோம்.
- ஐசிசி எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். நாங்கள் வரவேற்றோம்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா உடனான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு இது தொடர்பாக ஐசிசி-க்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. புறக்கணித்தால் கடுமையான நிதி அபராதம் விதிக்கப்படும் என ஐசிசி எச்சரித்துள்ளது.
இதனால் பாகிஸ்தான் தனது முடிவில் இருந்து பின் வாங்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே இன்று ஐசிசி குழு பாகிஸ்தான் கிரிகெட் போர்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தலைவர் மோசின் நக்வி கூறியதாவது:-
நாங்கள் அவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். தற்போதைய நிலையில் இதுபற்றி மேலும் கருத்து கூறுவது சரியாக இருக்காது. ஐசிசி-யில் பதிலை பெற்ற பிறகு நாங்கள் முடிவு செய்வோம். ஐசிசி பதில் அளித்தபின், ஆலோசனைக்காக பிரதமர் ஷேபாஸ் ஷெரீபை சந்திப்போம். நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிப்பு வெளியாகும்.
எங்களுடைய விருந்தினருக்கு நாங்கள் வரவேற்பு அளித்தோம். ஐசிசி எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். நாங்கள் வரவேற்றோம். ஐசிசி- வங்கதேசம் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை குறித்து நாங்கள் கருத்து கூற இயலாது. வங்கதேசத்தின் முடிவில் அர்த்தமுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் உள்ளோம்.
ஐசிசி மிரட்டல்களுக்கு நாங்கள் பயந்துவிடுபவர்கள் அல்ல என்பது உங்களுக்குத் தெரியும். எங்களுடைய ராணுவ தளபதி ஆசிம் முனீர் பற்றி எல்லோருக்கும் தெரியும். எந்த தடையையும் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை.
இவ்வாறு மோசின் நக்வி தெரிவித்துள்ளார்.





